ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்கிய 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. இணையத்தில் அவ்வப்போது படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் குடும்பத்தினருடன் ரஜினி; வைரலாகும் போட்டோ! - ஏ.ஆர்.முருகதாஸ்
'தர்பார்' படப்பிடிப்பில் இருந்து மீண்டும் பல புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை வைரலாக்கி வருகின்றன.
File pic
இந்நிலையில் மீண்டும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள். அதாவது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மனைவியும் அவரது மகளும் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.