தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தாராள பிரபு படத்தில் இணைந்த இரட்டை இசையமைப்பாளர்கள்! - vivek-mervin

தாராள பிரபு படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தாராள பிரபு படத்தில் இணைந்த இரட்டை இசையமைப்பாளராகள்
தாராள பிரபு படத்தில் இணைந்த இரட்டை இசையமைப்பாளராகள்

By

Published : Jan 22, 2020, 5:09 PM IST

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் தாராள பிரபு. ஹிந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்க்காக இப்படம் உருவாகியுள்ளது.

விந்து தானம் மற்றும் குழந்தையின்மை அகியவற்றை அடிப்படையாக வைத்து உருவாகிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்திற்காக மொத்தம் 8 இசைமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்யும் வகையில் இன்று அந்த 8 இசையமைப்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று படக்குழுஅறிவித்தது.

அந்த வகையில் முதலாவதாக விவேக் சிவா- மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரசாத பாடல் மூலம் பிரபலமான விவேக் சிவா- மற்றும் மெர்வின் சாலமன், குலேபகாவலி , பட்டாஸ் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details