மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில், நடிகர்கள் லால், யோகி பாபு, நடிகைகள் ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஒருத்தனையும் விடாத 'கர்ணன்' : மிரட்டும் டீஸர்! - கர்ணன் பட டீஸர்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திலிருந்து வெளியான 'கண்டா வரச் சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்', 'தட்டான் தட்டான்' ஆகிய மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீஸரில் மக்களின் உரிமைகளைப் பறித்துச் செல்லும் ஆதிக்க வர்கத்தினரின் செயல்பாடுகளை மாரிசெல்வராஜ் தனக்கே உரித்தான பாணியில் காட்சிபடுத்தியுள்ளார். டீஸர் வெளியான சில மணி நேரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் #KarnanTeaser என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.