தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘அசுரன்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் ஏன்? - asuran release date

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Asuran U/A

By

Published : Sep 30, 2019, 5:52 PM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அசுரன்’. இதில் அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், டீஜே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘கத்தரி பூவழகி’, ‘பொல்லாத பூமி’ ஆகிய பாடல்கள் இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. இந்நிலையில் ‘அசுரன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Asuran trailer clip

அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘அசுரன்’ திரைப்படத்துக்கு யு/ஏ (U/A) சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் சில அதீத வன்முறை காட்சிகள் காரணமாகவே யு/ஏ கிடைத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ஷோலே' காலியா காலமானார்.!

ABOUT THE AUTHOR

...view details