தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சாலா கப் எடுத்து வை...' - விருது குவித்து மிரட்டும் தனுஷ்! - சினிமா அண்மைச் செய்திகள்

அசுரன் படத்துக்கான தேசிய விருதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷுக்கு இன்று (நவ.28) கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/28-November-2021/13761679_dhanush1.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/28-November-2021/13761679_dhanush1.JPG

By

Published : Nov 28, 2021, 7:47 PM IST

ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவானது, இன்றுடன்(நவ.28) நிறைவடைகிறது.

இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டு பலர் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் சென்ற வாரம் நடிகை சமந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

தனுஷுக்கு விருது வழங்கப்பட்டது குறித்த ட்விட்டர் பதிவு

இந்நிலையில் விழாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அசுரன்' திரைப்படம் திரையிடப்பட்டது. அதன்படி அசுரனில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் ஆடுகளத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் அசுரனுக்காக தேசிய விருது வாங்கியிருந்தார். இந்நிலையில், பலரும் பாராட்டும் வகையில் மற்றொரு விருதை தனதாக்கியுள்ளார். அவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Beast: தளபதி ரசிகர்களின் பார்வைக்கு 'Feast' வைத்த 'Beast' இயக்குநர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details