தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Dhanush Next Movie: 'ராக்கி' இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்? - Dhanush will act in the film directed by Arun Matheswaran

Dhanush Next Movie: ராக்கி, சாணிக்காயிதம் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில், தனுஷ் நடிக்கவுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'ராக்கி' இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்?
'ராக்கி' இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்?

By

Published : Dec 24, 2021, 7:02 PM IST

Dhanush Next Movie: தனது முதல் பட ட்ரெய்லரின் மூலமே ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியவர், இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

இவர் இயக்கிய 'ராக்கி' படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி, பிக்பாஸ் புகழ் சிபி, ஜெயக்குமார் ஜானகிராமன், ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் நேற்று (டிசம்பர் 23) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம், வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் புதிய படமொன்றில் நடிப்பதை நல்வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஓம் நமச்சிவாய" எனப் பதிவிட்டுள்ளார்.

இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளது.

தற்போது தனுஷ், கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகியுள்ள 'மாறன்' வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

அதனைத்தொடர்ந்து இயக்குநர் சேகர் கம்முலாவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் அவரது அண்ணன் செல்வராகவனுடன் 'நானே வருவேன்' படத்திலும், தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Vadivelu affected Covid 19: வடிவேலுவிற்குக் கரோனா - என்ன நிகழ்ந்தது?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details