கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் நிதீஷ் வீரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவருக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
'மனசே தாங்கல' - நிதீஷ் வீராவின் மறைவுக்கு தனுஷ் இரங்கல் - Dhanush mourns Nitish Veera's death
நிதீஷ் வீராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ள நடிகர் தனுஷ், மனம் உடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
dhanush tweet This is disheartening. Rest in peace my brother.
நடிகர் தனுஷ் நிதீஷ் வீராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் தான் மனம் உடைந்து விட்டதாகவும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 2006இல் தனுஷூடன் இணைந்து நடித்த புதுப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, பேரன்பு, ராட்சசி, சிந்தனை செய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்துள்ளார்.