'தரமணி' படத்தில் வசந்த் ரவி நடிக்கும் 'ராக்கி' படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். அதனை தொடர்ந்து அவர் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் 'சாணிக்காகிதம்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்னும் இப்படங்கள் வெளியாகவில்லை. இதனிடையே அருண் மாதேஸ்வரன், தனது மூன்றாவது படத்தில் தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.