தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராட்சசனுடன் இணையும் அசுரன்? - ராம்குமார் இயக்கும் புதிய ஃபேன்டஸி திரைப்படம்

'ராட்சசன்' படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கும் புதிய ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush
Dhanush

By

Published : Jan 22, 2020, 11:37 AM IST

Updated : Jan 22, 2020, 11:50 AM IST

'அசுரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' நவம்பரில் வெளியானது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி 'பட்டாஸ்' படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 'சுருளி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், 'பரியேறும் பெருமாள்' பட இயக்குர் மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் திருநெல்வேலியில் உள்ள பூஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தனுஷின் அடுத்தப் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்தப்படத்தை 'ராட்சசன்' படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்க இருப்பதாகவும், ஃபேன்டஸி-ஆக்‌ஷன் ஜேனரிலும் இப்படம் உருவாகவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 'பட்டாஸ்' படத்தைத் தொடர்ந்து ராம்குமாரின் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமார் - தனுஷ்

முன்னதாக தனுஷ் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'ராட்சசன்' படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநருடன் தனுஷ் கூட்டணி அமைக்க இருப்பது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க...

'தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகர்களுள் சந்தானமும் ஒருவர்' - இயக்குநர் புகழாரம்

Last Updated : Jan 22, 2020, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details