தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களால் புகழ் பெற்றவர் இயக்குநர் சுந்தர்.சி.
90களின் காலக்கட்டத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ’உள்ளத்தை அள்ளித்தா’, ’மேட்டுக்குடி’ தொடங்கி, ’வின்னர்’, ’கலகலப்பு’ எனத் தொடர்ந்து, சமீபத்தில் வந்த நகைச்சுவைப் படங்கள் வரை இவரது அனைத்து படங்களும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இவரது பேய் படமான அரண்மனை படத்தின் வரிசையில் தற்போது இவர் இயக்கியுள்ள அரண்மனை 3ஆம் பாகம் அடுத்த வாரம் வெளியாகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்
இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும், மூன்று தேசிய விருதுகள் வென்றவருமான தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது ’மாறன்’, ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவற்றைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சாதனை படைத்த 'ருத்ர தாண்டவம்'