நடிகர் தனுஷ் தற்போது த க்ரே மேன் என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. படப்பிடிப்பு சமயத்தில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.