மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கர்ணனுக்காக நன்றி தெரிவித்த தனுஷ் - தனுஷின் புதியப்படங்கள்
விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் 'கர்ணன்' திரைப்படம் வெற்றிபெற்றுள்ள நிலையில், படத்திற்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
dhanush
முன்னதாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்திற்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக நடிகர் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சென்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.