தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனைவரிடமும் அன்பை செலுத்துவோம்: தனுஷ் - dhanush birthday

சென்னை: அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

dhanush

By

Published : Jul 28, 2019, 2:54 PM IST

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் பி. ராஜா ஆகியோர் தலைமையில் ரத்ததான முகாம் சென்னையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து ரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை.

ரத்ததானம் வழங்கிய ரசிகர்கள்

ரத்ததான முகாமை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தியாகராஜன், தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். விழாவில் பேசிய கலைப்புலி தாணு 1500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார்.

ரத்ததான முகாமில் தனுஷ்

இதனையடுத்து நடிகர் தனுஷ் பேசுகையில், ”ரத்ததானம் செய்த உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details