தமிழ் சினிமாவில் உள்ள பல திறமையானவர்களை தனது படங்களில் அறிமுகப்படுத்துவதில் தனுஷ் தவறுவதில்லை, அதோடு திறமையானவர்களை பாராட்டுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதும் இல்லை.
இந்நிலையில் ஷான் ரோல்டன் பாலாஜி மோகன் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவர் படத்திற்கு இசையமைப்பதோடு பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தனுஷின் 'பவர் பாண்டி', 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஷான் ரோல்டன் இசையில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பலரும் ரோல்டனுக்கு பாராட்டுகளை தெரிவித்துவந்தனர்.