தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி' - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய தனுஷ்! - அசுரன் படக்குழுவை பாராட்டிய ஸ்டாலின்

பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தைக் கேள்வி கேட்ட 'அசுரன் சிவசாமி' தனுஷ் திமுக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

dhanush

By

Published : Oct 17, 2019, 1:16 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன் படத்தைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் தனது ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படம் அசுரன். இதில் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படம் பலதரப்பட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரிலும் தொலைபேசியிலும் இயக்குநர் வெற்றிமாறனையும்; கதையின் நாயகன் தனுஷையும் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இதனையடுத்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில், 'காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க: அசுரன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details