சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள திரைப்படம் ‘கென்னடி கிளப்’. ஆண்கள் கபடியை மையமாக வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் சுசீந்திரன். தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி கிளப்’ படத்தை இயக்கியிருக்கிறார். நெல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் வெளியிட்ட ‘கென்னடி கிளப்’ டீசர் - sasi kumar
பெண்கள் கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள ‘கென்னடி கிளப்’ படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
kennedy club
இந்த படத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, நிஜமான கபடி வீராங்கனைகளை படத்தில் நடிக்க வைத்திருப்பதுதான். இறுதிக்காட்சியை படமாக்க பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த கபடி வீராங்கனைகளை இந்தப் படக்குழு கலந்துகொள்ள செய்திருந்தது. தற்போது இதன் டீசர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.