இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துவரும் பெயரிடப்படாத திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
D40 என்று அழைக்கப்பட்டுவரும் அந்தத் திரைப்படத்திற்கு 'சுருளி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜுடன் பணிபுரிந்து வரும் தனுஷின் திரைப்படத்திற்கு 'கர்ணன்' என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்திக் சுப்பராஜின் திரைப்படத்திற்கு 'சுருளி' என பெயர் வைக்கப்பட்ட செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு' - 'சூரரைப் போற்று' டீஸர் வெளியீடு