தமிழில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து வலம் வருகிறார் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை இவரது பயணம் தொடர்கிறது. இந்தியில் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பக்கிரி படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்டு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தனுஷ்
தனுஷின் அடுத்த பட இயக்குநர் யார் தெரியுமா? - ட்விட்டர் அறிவிப்பு
தனுஷின் புதுப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
என்னை நோக்கி பாயும் தோட்டா விரைவில் வெளியாகும் என்பதை அடுத்து, வடசென்னை 2 படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையடுத்து அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். ரஜினியை அடுத்து தனுஷூடன் கைகோர்க்கிறார் கார்த்திக். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிடை ஐஸ்வர்ய லெக்ஷ்மி நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.