நான்காவது முறையாக இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'அசுரன்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ’வெக்கை’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் அசுரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
#AsuranTrailer:படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது - 'அசுரன்' தனுஷ்! - மஞ்சு வாரியர்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'அசுரன்' படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
asuran
சமீபத்தில் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது ட்ரெய்லர் வெளியானதையடுத்து #AsuranTrailer என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து இணையத்தை கலக்கி வருகின்றனர். அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.