தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மேன்லி லுக்கில் தனுஷ்; ரசிகர்கள் கொண்டாட்டம்! - துரை செந்தில்குமார்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'பட்டாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

dhanush

By

Published : Jul 28, 2019, 7:21 PM IST

கலைத்துறையில் நடிகராகத் தன் பயணத்தைத் தொடங்கி இன்று பல பரிமாணங்களில் வளர்ந்து நிற்கும் தனுஷ் இன்று தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதற்கிடையே அவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அப்பா - மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. எந்தப் பட்டமும் பெறாமல் இருந்த தனுஷ், பட்டாஸ் படத்தின் மூலம் இளைய சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு அதில் இளைய சூப்பர் ஸ்டார் என பட்டம் சூட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரில் தனுஷ் இளமையாக தோன்றுகிறார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படத்துடன் 'பட்டாஸ்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details