தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகிறதா தனுஷ் படங்கள்! - cinema update

தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியாவதாக தகவல் பரவி வரும் நிலையில் படக்குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Dhanush movies  released on OTT?
Dhanush movies released on OTT?

By

Published : Oct 24, 2021, 1:16 PM IST

சென்னை :தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வெற்றிபெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ’மாறன்’, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ’நானே வருவேன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மாறன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ஹாஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி நேரடியாக சன்டிவியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளனர். இரண்டு படங்களும் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : 'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details