நடிகர் தனுஷ் தற்போதைய நிலையில், தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
அவர் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கும், அவர் தேசிய விருது கிடைக்கும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழில் கார்த்திக் நரேன், வெற்றிமாறன், செல்வராகவன் என அவர் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தனது 47ஆவது படத்தில் இளம் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், இளம் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயங்கியவர் அருண் மாதேஸ்வரன். இதில் சாணிக்காகிதம் படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தனுஷின் அடுத்த படத்தை அருண் மாதேஸ்வரனுடன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.