கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஜகமே தந்திரம்' ட்ரெய்லர் - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று(ஜூன்.01) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி சரியாகக் காலை படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
2 நிமிடம், 8 நோடி உள்ள இந்த ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. கிராமத்தில் இருக்கும் தனுஷ் திடீரென கேங்கஸ்டராக மாறுகிறார். அதனால் அவர் சந்திக்கும் விளைவுகள் என்ன என்பதே படத்தின் கதை என ட்ரெய்லர் மூலம் தெரிகிறது. கரோனா பரவல் காரணமாக இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் இம்மாதம் 18ஆம் தேதி வெளியாகிறது.