மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜினா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை (மார்ச் 11) வெளியாகிறது. இப்பாடலுக்கு 'திரௌபதியின் முத்தம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இத்தலைப்பைப் பார்த்த நெட்டிசன்கள் 'திரௌபதி' பட இயக்குநர் மோகன் ஜியை டேக் செய்து கிண்டல் அடித்துவருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.