மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில், ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
அமேசான் பிரைமில் வெளியாகும் தனுஷின் 'கர்ணன்'! - கர்ணன் திரைப்படம்
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Karnan
இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டினர். சமீபத்தில் இந்தப் படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க', 'மஞ்சனத்திப் புராணம்', 'தட்டான் தட்டான்' உள்ளிட்ட பாடல்களின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கர்ணன் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் மே 14ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.