'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் நடிப்பில் வெளியாகும் 40ஆவது படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது இந்த படம் திரையரங்கில் வெளியாகமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.