நடிகர் தனுஷ் 'தி க்ரே மேன்' படப்பிடிப்புக்காக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இருந்தார். படப்பிடிப்பு முடிந்த போதிலும், கரோனா ஊரடங்கு காரணமாகஅவர் சென்னை திரும்பாமல், குடும்பத்துடன் அங்கேயே இருந்தார்.
நேற்று (ஜூன் 30) சென்னை திரும்பிய தனுஷ், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள தனது 43ஆவது படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று (ஜூலை 1) சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.