தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், தனது 37ஆவது பிறந்தநாளை வருகிற 28ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தனுஷ் ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு இலவசக் கழிப்பிடங்களை தனுஷ் ரசிகர்கள் கட்டிக் கொடுத்துள்ளனர்.