படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்து படம் ரிலீசாகி, தற்போது வெற்றி நடைபோட்டுவரும் வேளை வரை ரசிகர்களிடையே தொடர்ந்து பெரிதும் பேசப்பட்டுவரும் திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தில், ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான இப்படம், கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கரோனா கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும், வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
இந்நிலையில், படம் வெளியாக, வெற்றியடைய உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ரசிகர்கள் சொல்கிறபடி தனுஷ் கர்ணனாகவே வாழ்ந்த இத்திரைப்படத்தை காவியமாக ரசித்துக் கொண்டாடும் தாய்மார்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் சார்பாக நன்றி.