'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் செல்வராகவன் - தனுஷ். இந்தக் கூட்டணியில் மீண்டும் படம் வராதா எனத் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ‘நானே வருவேன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
நானே வருவேன் படப்பிடிப்பு பூஜை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். கரோனா காரணமாக படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டதால், இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது முன் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று (அக். 16) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் கெளவ் பாய் (Cow boy) போன்று டான் லுக்கில் தோன்றியுள்ளார். அதுமட்டுமல்லாது இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு கட்டமாக முடிக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் 'ஆயிரத்தில் ஒருவன் - 2' படத்தில் இணையவுள்ளனர். இதன் படப்பிடிப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷின் நானே வருவேன் பட தலைப்பு மாறுகிறதா?