தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் - தனுஷின் மறக்கமுடியாத வாழ்த்து - கார்த்திக் சுப்பராஜ் படங்கள்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

karthik
karthik

By

Published : Mar 19, 2021, 6:42 PM IST

இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் குறும்படங்களை இயக்கி, பின்னர் வெள்ளித்திரையில் இயக்குநரானார். 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'மெர்க்குரி' படங்களை இயக்கி பிரபலமான அவர் ரஜினியை வைத்து இயக்கிய 'பேட்ட' படம் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவர் தற்போது தனுஷை வைத்து 'ஜகமே தந்திரம்' என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்தாக இவர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து 'சியான் 60' படத்தை எடுத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக வலம் வரும் கார்த்திக் சுப்பராஜ் இன்று (மார்ச் 19) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்குப் பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி, தாம் பணியாற்றிய இயக்குநர்களிலேயே கார்த்திக் சுப்பராஜ்தான் தலை சிறந்தவர் எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details