தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அத்ரங்கி ரே' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா? - Latest Bollywood news

'அத்ரங்கி ரே' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 'அத்ரங்கி ரே'
'அத்ரங்கி ரே'

By

Published : Jul 27, 2020, 2:52 PM IST

பாலிவுட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத்தை ஆனந்த எல்.ராய் இயக்கியிருந்தார்.

இதற்கிடையில் தற்போது இதே கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி வருகிறது. 'அத்ரங்கி ரே' என பெயரிடப்பட்டுள்ள இதில் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.

அத்ரங்கி ரே

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 'அத்ரங்கி ரே' படத்தின் ஷூட்டிங் மீண்டும் அக்டோபர் மாதம் முதல் மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்

இதுதவிர தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் மே மாதம் வெளியாவதாக இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details