சென்னை: தனுஷ் பிறந்தநாளுக்கான காமன் டிபியை அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
பிரபலங்கள் பிறந்தநாள் என்றால் அனைவரும் ஒரே முகப்புப் படத்தை (profile picture) வைப்பது சமீப காலமாக தோன்றிய வழக்கம். ரசிகர்கள் இந்த வேலையை தீவிரமாக செய்து வருகின்றனர். அதேசமயம் பிரபலங்களும் சிலரது காமன் டிபியை வெளியிடுகின்றனர். அந்த வகையில் தனுஷ் பிறந்தநாளை (ஜூலை 28) முன்னிட்டு அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன், காமன் டிபியை வெளியிட்டுள்ளார்.