தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தள்ளிப்போன தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்பு... காரணம் இதுதான்! - செல்வராகவன் படங்கள்

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்
தனுஷ்

By

Published : Aug 20, 2021, 8:37 AM IST

தனுஷ் - செல்வராகவன் சகோதரர்களின் கூட்டணியில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், 'மயக்கம் என்ன'. விமர்சனரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷ் - செல்வராகவன் காம்போவை எப்போது திரையில் காண முடியும் என இருவரது ரசிகர்களும் நீண்ட நாள்களாகக் கேட்டு வந்தனர். இதனையடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் - செல்வராகவன் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று (ஆக.20) தொடங்குவதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'நானே வருவேன்' என படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தற்போது கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கும் மாறன், மித்ரன் ஜவஹரின் திருச்சிற்றம்பலம், தெலுங்கில் சேகர் கமுலாவின் படம் என படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

இதனால் தான், 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் முடித்துவிட்டு, அண்ணன் செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details