தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் ’எனை நோக்கிபாயும் தோட்டா’. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.
இயக்குநருக்கும் தயாரிப்பளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் படம் வெளியாவது தாமதம் ஆனது. சமீபத்தில் தணிக்கை குழு இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மதன் ட்விட்டரில் ’எனை நோக்கிபாயும் தோட்டா’ முழுமையாக தயாராகிவிட்டது. படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது என ட்விட் செய்துள்ளது.