2016இல் வெளிவந்த 'தேவி' முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா ஆகியோர், இரண்டாவது பாகத்திலும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் பாகத்தில் நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாத்தி ஆகியோர் மற்றொரு கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
நடிகை கோவை சரளா, யோகி பாபு, குரு சோமசுந்தரம், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜிவி பிலிம்ஸ் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரித்துள்ளனர்.