வெகு நாட்களாகக் காதலித்து வந்த நடிகர் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இறுதியாக 'பத்மாவத்' திரைப்படத்தில் ஒன்றாக நடித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி இன்று தங்கள் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
இதை முன்னிட்டு இருவரும் ஆந்திர மாநிலம், திருமலை-திருப்பதியில் உள்ள ஏழுமலையான் சந்நிதியில் பிரார்த்தனை செய்து, தங்கள் நாளைத் தொடங்கினர். பாரம்பரிய உடையில் காணப்பட்ட இருவரும், ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.