டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால் என்பவர் காதலிக்க மறுத்த காரணத்துக்காக சில வருடங்களுக்கு முன்பு ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனையடுத்து இவரை போன்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமான பெண்ணாக வலம்வருகிறார் லட்சுமி அகர்வால்.
இவரது இந்தச் செயலை பாராட்டி 2014ஆம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி கவுரவப்படுத்தினார்.
இந்நிலையில் லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை மையப்படுத்தி 'சபாக்' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.