உலகப்பெருந்தொற்றான கரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தற்போது வரை கரோனா தொற்றுக்கு 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேசிய ஊரடங்கை மோடி அமல்படுத்தியுள்ளார். கரோனா தொற்றால் அனைத்து மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாகச் செயல்பட்டுவருகின்றனர்.
தேசிய ஊரடங்கு உத்தரவு இருந்தா என்ன... கன்னக்குழி அழகி தீபிகாவின் பயண 'ப்ளான்' - தீபிகா படுகோனே
தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து தீபிகா படுகோனே அடுத்த சிலவாரங்களுக்கு தான் மேற்கொள்ள இருக்கும் பயண திட்டம் குறித்த மேப்பை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
deepika
அந்த வகையில் பாலிவுட்டின் கன்னக்குழி அழகி தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வீட்டின் வரைப்படத்தை பதிவிட்டு அடுத்த சிலவாரங்களுக்கு மேற்கொள்ள இருக்கும் பயணத்தின் திட்ட மேப் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலர் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.