தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் வீரமரணம் - பிரபலங்கள் சல்யூட் - லடாக் எல்லைப்பகுதி

சென்னை: இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

திரை பிரபலங்கள்
திரை பிரபலங்கள்

By

Published : Jun 17, 2020, 8:03 PM IST

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர், வீரமரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு திரை பிரபலங்கள் தங்களது இரங்கல்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில், "தாய் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அவர்களின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்திய ராணுவத்துக்கு உறுதுணையாக நான் எப்போதும் இருப்பேன். ஜெய் ஹிந்த்" என பதிவிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி

நடிகை தமன்னா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு போற்ற வேண்டும் என்றும், அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் ஷாந்தி" என பதிவிட்டுள்ளார்.

தமன்னா

ABOUT THE AUTHOR

...view details