தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'விரும்பியதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை போடலாம்' - 'டியர் காம்ரேட்' - விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடிப்பில் நான்கு மொழிகளில் தயாராகும் 'டியர் காம்ரேட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

'டியர் காம்ரேட்'

By

Published : Jul 11, 2019, 3:57 PM IST

Updated : Jul 11, 2019, 5:19 PM IST

தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாயாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா இணை நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற 'இன்கம் இன்கம் காவாலே' பாடல் பட்டிதொட்டியெங்கும் சக்கைபோடு போட்டது.

இதனையடுத்து இதே இணை மீண்டும் 'டியர் காம்ரேட்' திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படம் நான்கு மொழிகளில் தயாராகிவருகிறது. ஏற்கனவே இதன் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா

இந்த டெய்லரில் விஜய் தேவரகொண்டா கல்லூரி படிக்கும் மாணவர், இளைஞர் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக்கெட் ஆடும் வீராங்கனையாக நடித்துள்ளார்.

ட்ரெய்லரில் இந்த இணை தோன்றும் காதல் காட்சிகளுக்கு பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. விரும்பியது கிடைக்க எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை செய்யலாம் என்ற கோணத்தில் தொடங்கும் ட்ரெய்லர் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. அதிலும் கல்லூரி இளைஞராக விஜய் தேவரகொண்டா பேசும் வசனங்களில் அனல் தெறிக்கிறது.

ராஷ்மிகா மந்தனா

முக்கியமாக ட்ரெய்லரின் இறுதிக் காட்சியில் நாயகன் பேசும், 'என்னை பயமுறுத்துவதாக நினைத்து நீங்கள்தான் பயந்துகொண்டிருக்கிறீர்கள்' என்ற மிரட்டலான வசனம் ரசிகர்களை கவர்ந்துவருகிறது.

Last Updated : Jul 11, 2019, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details