தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பாகுபலி' வசனத்திற்கு பின் 'முக்காலா முக்காபுலா' நடனம் - வார்னரின் அலப்பறைகள்

'அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என டிக்டாக் செய்திருந்த டேவிட் வார்னார், பிரபு தேவாவின் முக்காலா...முக்காபுலா பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

David Warner
David Warner

By

Published : May 18, 2020, 2:35 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கா விளையாடிவருபவர். இந்தாண்டு கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.

இதனால் தனது மனைவி மகளுடன் டேவிட் வார்னர் வீட்டில் இருந்தபடியே செய்துவரும் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே 'அலா வைகுந்தபுரமுலு' படத்தில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா புட்ட பொம்மா' (Butta bomma), 'ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa)' உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

சமீபத்தில் இயக்குநர் ராஜமெளலியின் 'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற 'அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என்ற வசனத்தை பாகுபலி கெட் அப்பில் டிக்டாக் செய்து பதிவிட்டார். தற்போது பிரபு தேவாவின் பிரபல பாடலான 'முக்காலா...முக்காபுலா' பாடலுக்கு தனது மனைவி கேண்டிசுடன் நடனமாடியுள்ளார். இதில் சுவராசியம் என்னவென்றால், இவர்களுக்கு தெரியாமல் வார்னரின் செல்ல மகள் பின்னால் நின்று தனது சுட்டித்தனத்தை காட்டியுள்ளார்.

இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராமில் இந்த பாடலுக்கு யார் நன்றாக நடனமாடியுள்ளனர்? நானா எனது மனைவியா அல்லது ஷில்பா ஷெட்டியா என பதிவிட்டு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை டேக் செய்துள்ளார். ஷில்பா ஷெட்டியை வார்னர் டேக் செய்ததற்கு காரணம், பிப்ரவரி மாதத்தில் ஷில்பா ஷெட்டி இதே பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருக்க, பிரபு தேவா அவருக்கு பின்னால் சென்றுகொண்டிருப்பார். அப்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையும் படிங்க: குடும்பத்தினருடன் லூட்டி அடிக்கும் டேவிட் வார்னர்

ABOUT THE AUTHOR

...view details