தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கண்ணீர் விட்டு கதறிய கே.வி. ஆனந்த் மகள்கள்! - கே.வி. ஆனந்த் இறப்பு

சென்னை: மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்தின் உடலை பார்த்த இரண்டு மகள்களும் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கே.வி. ஆனந்த்
கே.வி. ஆனந்த்

By

Published : Apr 30, 2021, 5:56 PM IST

இயக்குநர் கே.வி.ஆனந்த் சென்னை அடையாறில் தன்னுடைய அம்மா, மனைவி, இரண்டு மகள்களோடு வசித்து வந்தார். அவரின் மனைவி, மகளுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கே.வி.ஆனந்திற்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக தனிமையில் இருந்த சூழலில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பு காரணமாக கே.வி.ஆனந்த் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இடையில் சில நிமிடம் ஆம்புலன்ஸ் அவரது வீட்டின் வெளியே குடும்பத்தினர் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது. அங்கு அவரது மகள்கள் இருவரும் ஆம்புலன்ஸ் வெளியில் இருந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது அங்கிருந்தவர்களிடையே கண்கலங்க வைத்தது. இறுதியில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் கேவி ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர் கே.வி. ஆனந்த் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸுக்காக காத்திருந்த போதுதான் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details