தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதியின் புதுப்படத் தேதி அறிவிப்பு - vijay sethupathi new movie date annonced

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

By

Published : Nov 6, 2021, 11:02 AM IST

Updated : Nov 6, 2021, 11:13 AM IST

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா, விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இதில் மேகா ஆகாஷ், விவேக், மோகன் ராஜா, மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் முதன்முறையாக அண்மையில் காலமான நகைச்சுவை நடிகர் விவேக், விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார்.

இப்படத்தின் கதை, சர்வதேச பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அசால்ட் சேதுக்கு பிறந்தநாள்

Last Updated : Nov 6, 2021, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details