தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுப் பரவலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பலரும் சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துவருகின்றனர். வறுமைக் கோட்டுக்கு கீழ், உள்ளவர்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் பல சின்னத்திரை, வெள்ளித்திரையைச் சேர்ந்த பிரபலங்களும் உதவி செய்துவருகின்றனர்.
அந்த வகையில் சில தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, வறுமையில் வாடுவோருக்கு உதவி வருகிறார். உதவிக்கரம் நீட்டும் தர்ஷாவுக்கு இன்று (ஜுன்.7) பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு.
அதன்படி கரோனா பேரிடர் சமயத்தில் தங்களது உயிரைத் துச்சமெனக் கருதி பணியாற்றி வரும் காவல் துறையினரின், தாகம் தணிக்கும் பொருட்டு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை காவலர்களுக்கு வழங்கி வானளாவ உயர்ந்துள்ளார், தர்ஷா குப்தா.