2.0 படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கும் படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன், பிரதிக் பாபர், ஜட்டின் ஷர்னா, நவாப் ஷா, தலிப் தஹில் என பல திரை பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.