'தர்பார்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு! - தர்பார்
'தர்பார்' சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
darbar
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 'தர்பார்' திரைப்படம் நாளை (ஜனவரி 9) திரைக்கு வரவுள்ளது. இதனையடுத்து இப்பட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 9, 10, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.