தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தர்பார்' ரஜினிக்காக ஒன்றிணையும் இந்திய பிரபலங்கள்!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தின் மோஷன் போஸ்டரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிடவுள்ளனர்.

darbar

By

Published : Nov 5, 2019, 11:17 PM IST

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவன தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் எல்லாம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நவம்பர் 7ஆம் தேதி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ரஜினியின் தீம் மியூசிக் வெளியாகும் என அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது மோஷன் போஸ்டர் வெளியீடுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், இப்போது சமூக வலைதளத்தில் '#DarbarMotionPoster' என்னும் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதை அந்தந்த மொழிகளில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிடவுள்ளனர். இதன் மூலம் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ரஜினிக்காக ஒன்றிணைகின்றனர்..

ABOUT THE AUTHOR

...view details