தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆதித்யா அருணாச்சலத்தின் 'தர்பார்'... கெட்ரெடி... சும்மா கிழி! - தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதியை இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார்.

darbar

By

Published : Nov 24, 2019, 7:50 PM IST

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பாப்பர், சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

2020 பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ரஜினி டப்பிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். மேலும் பாடகர் விவேக்கின் வரிகளில் பிரபல பாடகர் எஸ்பிபி இன்டரோ பாடலைப் பாடியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இப்போதே நாட்களையும் நேரத்தையும் எண்ண தொடங்கிவிட்டனர். மேலும் '#ChummaKizhi' என்னும் ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details