ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘தர்பார்’. இதில் பிரதிக் பாப்பர், சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பு பணிகளை கவனித்து வருகிறார்.
'சும்மாகிழி'க்க 'தர்பார்' கெட்ரெடி புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு - darbar rajini
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
2020 பொங்கல் பண்டிகையையொட்டி இத்திரைப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ரஜினி டப்பிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் நாளை(நவ.27) வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பாடலாசிரியர் விவேக் இன்று மாலை தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாட்டின் இரண்டு வரிகளை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
தற்போது பாடல் வெளியாக ஒரு நாள் இருக்கும் நிலையில் படக்குழு சும்மா கிழி என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ரஜினிகாந்த் மிக ஸ்டைலிஷாக நடந்து வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடலை தெலுங்கிலும் இந்தியிலும் வெளியிட படக்குழு முடிவு செய்யதுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் மீண்டும் '#ChummaKizhi' என்னும் ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.